பெரியார், சன் டிவி, Beheading et al ...
இன்றைக்கு வாசித்த செய்திகளிலிருந்து சில, உங்கள் பார்வைக்கு:
1. திருவரங்கத்தில் 4 மாதங்களுக்கு முன் நடந்த பெரியார் சிலை உடைப்பையும், அதன் தொடர்பான வன்முறையையும் தொடர்ந்து, நேற்று விஷமிகள் சிலர், திருவாரூரில் உள்ள முத்துப்பேட்டையில் உள்ள பெரியார் சிலைக்கு அவமரியாதை செய்துள்ளதாகத் தெரிகிறது. அசம்பாவிதம் எதும் நடக்காமல் இருக்க, அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சிலைக்கு முன் திராவிடர் கழக / மதிமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக, மீரான் ஹ¤சைன், மனோகரன் என்று இருவரை போலீசார் கைது செய்திருப்பதாகத் தெரிகிறது.
இது இப்படி இருக்க, திராவிடர் கழகத்தைச் சேர்ந்த தொ(கு)ண்டர்கள் இருவர், தஞ்சையிலுள்ள, பிரசித்தி பெற்ற பெருவுடையார் (பெரிய) கோயிலுக்குச் சென்று, அங்கிருந்த அர்ச்சகரை அடித்து உதைத்து அவரது பூணூலை அறுத்து எறிந்ததாக போலீஸ் கூறினர். அர்ச்சகரின் புகாரைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பழி ஓரிடம், பாவம் ஓரிடம் என்பதற்கு இதுவே சான்று!!! இந்த சிலை அவமரியாதையின் எதிரொலி திருவரங்கத்திலும் கேட்டது. அங்கு, சில தி.க. தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
2. கடந்த டிசம்பர் மாதம், சன் டிவி இரண்டு உயர் ரக விமானங்களை இறக்குமதி செய்ய அரசிடம் மனு செய்திருந்தது. அவை bombardier challenger வகையைச் சார்ந்த விமானங்கள். விலை 236 கோடி ரூபாய்! அப்ளை செய்த ஒரு மாதத்திற்குள், அந்நிய வணிகத் துறை சன் டிவிக்கு இறக்குமதி லைசன்ஸ் வழங்கி விட்டதில் ஆச்சரியம் எதும் இல்லை என்றாலும், இந்த மேட்டர் சன் டிவி லாபத்தில் கொழிக்கிறது என்பதை சுட்டிக் காட்டுகிறது. அந்த இரண்டு விமானங்களும் பயணிகள் விமானங்கள் அல்ல, அவை பிசினஸ் ஜெட் வகையைச் சார்ந்தவை. இந்தியாவில் உள்ள எந்த கட்சியும், தனது தலைவர்களின் உபயோகத்திற்கு இவ்வளவு விலை உயர்ந்த விமானங்களை வாங்குவதை நினைத்துப் பார்க்க முடியாது என்று தோன்றுகிறது.
3. ஒரு 12 வயது சிறுவன், கையில் கத்தியை ஏந்திய வண்ணம், தன் முன் கிடக்கும் (கண்கள் கட்டப்பட்ட) மனிதனை, 'அமெரிக்கக் கைக்கூலி' என்று உரத்த குரலில் கண்டனம் செய்து விட்டு, 'கடவுள் மிகப் பெரியவர்' என்ற கோஷத்துக்கிடையே, அந்த மனிதனின் தலையைக் கொய்து, கொய்த தலையை முடியைப் பிடித்து தூக்கி வெற்றி முழக்கமிடுகிறான்.
மேற்கூறியதை காட்டும் வீடியோ படமொன்று, பாகிஸ்தானில் தற்சமயம் உலா வருகிறது. இந்த அநியாய வன்முறையில் உயிரிழந்த குலாம் நபி, தலிபானுக்கு ஏதோ வகையில் துரோகம் செய்ததாகத் தெரிகிறது. கொல்லப்படுவதற்கு முன், தலிபான் அரக்கர்கள் (வாக்குமூலம் மூலம்) குலாம் நபியை தான் ஒரு துரோகி என்று ஒப்புக் கொள்ள வைத்துள்ளனர்.
குலாம் நபியை வதம் செய்த அந்த (ராணுவச் சீருடை அணிந்த) கொலைகாரக் குழந்தை, "இவன் ஒரு அமெரிக்க ஒற்றன். இவனைப் போன்றவர்களுக்கு இது தான் முடிவு" என்று வீடியோவில் கூறுகிறது. சிறுவர்களை தீவிரவாதிகளாக மாற்றும் தலிபான் என்ற இரக்கமற்ற அரக்க இயக்கத்தை, முழுவதுமாக ஒழிக்காவிட்டால், ஆப்கானிஸ்தானுக்கு உய்வு என்பது கிடையாது.
இதற்கெல்லாம் மூல காரணம் அமெரிக்கா என்பதும் தெளிவு. ஆப்கானிஸ்தானும், இராக்கும், பிணக்காடாக மாறியதற்கு, அமெரிக்க எதேச்சதிகாரம் ஒரு முக்கியக் காரணம் என்பதை யாரும் மறுக்க இயலாது.
என்றென்றும் அன்புடன்
பாலா
*** 335 ***
9 மறுமொழிகள்:
Test comment !
//கடந்த டிசம்பர் மாதம், சன் டிவி இரண்டு உயர் ரக விமானங்களை இறக்குமதி செய்ய அரசிடம் மனு செய்திருந்தது. அவை bombardier challenger வகையைச் சார்ந்த விமானங்கள். விலை 236 கோடி ரூபாய்! அப்ளை செய்த ஒரு மாதத்திற்குள், அந்நிய வணிகத் துறை சன் டிவிக்கு இறக்குமதி லைசன்ஸ் வழங்கி விட்டதில் ஆச்சரியம் எதும் இல்லை என்றாலும், இந்த மேட்டர் சன் டிவி லாபத்தில் கொழிக்கிறது என்பதை சுட்டிக் காட்டுகிறது. அந்த இரண்டு விமானங்களும் பயணிகள் விமானங்கள் அல்ல, அவை பிசினஸ் ஜெட் வகையைச் சார்ந்தவை. இந்தியாவில் உள்ள எந்த கட்சியும், தனது தலைவர்களின் உபயோகத்திற்கு இவ்வளவு விலை உயர்ந்த விமானங்களை வாங்குவதை நினைத்துப் பார்க்க முடியாது என்று தோன்றுகிறது//
மிஸ்டர் ...EDITED ...,
விமானத்தை வாங்கி இருப்பது சன் டீவி தானே? அப்புறம் எதற்கு -
"இந்தியாவில் உள்ள எந்த கட்சியும், தனது தலைவர்களின் உபயோகத்திற்கு இவ்வளவு விலை உயர்ந்த விமானங்களை வாங்குவதை நினைத்துப் பார்க்க முடியாது என்று தோன்றுகிறது"
இந்த வயித்தெரிச்சல்? ஒரு சூத்திரன் மேலே இருந்தாலே ...EDITED நூல் அரிக்குமே?
BY
(விவேகானந்தன்) 2:44 PM
ஐயா விவேகானந்தரே,
வருகைக்கு நன்றி, சன் டிவிக்கும் திமுக கட்சிக்கும் உள்ள (சம்)பந்தம் பற்றி உலகுக்கே தெரியும்போது, உங்களுக்கு தெரியாமல் இருப்பது விந்தையிலும் விந்தை :) மேலும், நான் வாசித்த எக்ஸ்பிரஸ் செய்தியில் இருந்ததைத் தான் நானும் சுட்டியுள்ளேன், பின் எதற்கு இத்தனைப் பாய்ச்சல், இத்தனை காழ்ப்பு ????? நன்றி.
***** EDITED *****
Vairu valikutha ? ...
instead You must be delited and appriciated -
A tamilan doing a good progress on his own merit.
Anyway you poppsss do not have that culture .Think if mama Balasubuuu of anathavikatn purchased the same . What you said - Wow see hoe bala is achiving things on merit .
What a jandu nee
-- (sathappan.k.v) 9:30 PM
Dear Sathappan,
Thanks !!!
I suggest you comment in THAMIZ instead of KILLING english like this ;-)
Pl. leave ENGLISH alone :)
bala,
good response to sethappan :)))))
Post a Comment